மின்கம்பி அறுந்து விழுந்ததில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது


மின்கம்பி அறுந்து விழுந்ததில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவன்குடி கிராமத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திருமருகல் பகுதியில் இருந்து தேவன்குடி கிராமத்திற்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேவன்குடி நடுத்தெருவில் இருந்து திருவாசல் தோப்பு தெரு பகுதிக்கு வயல் பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டு தெருவிளக்கு மட்டும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வயல்வெளியில் செல்லும் மின் கம்பிகள் சேதமடைந்து மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் காற்று வேகமாக வீசும் போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து அடிக்கடி தீப்பொறிகள் கொட்டி அப்பகுதியில் உள்ள குடிசை, வைக்கோல் போர் பற்றிக்கொள்கிறது. நேற்று மதியம் காற்று வேகமாக வீசியது. அப்போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து அறுந்து விழுந்ததில் கீழே கிடந்த வைக்கோல் பற்றி எறிந்தது. அதனை கண்ட அக்கம் பக்கத்து பெண்கள் உடனே தண்ணீர் ஊற்றி அணைத்தனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வயல்வெளியில் செல்லும் சேதமடைந்த மின் கம்பிகளை மாற்றி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story