படுமோசமாக காட்சியளிக்கும் ஒத்தவாடை தெருக்கள்


படுமோசமாக காட்சியளிக்கும் ஒத்தவாடை தெருக்கள்
x
திருவண்ணாமலை

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலையொட்டி உள்ள வட மற்றும் தென் ஒத்தவாடை தெருக்களை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேடு, பள்ளமான சாலைகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலையொட்டி வட ஒத்தவாடை மற்றும் தென் ஒத்தவாடை தெருக்கள் அமைந்துள்ளது. மேலும் இந்த பகுதிகளில் பல்வேறு கடைகள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றனர்.

ஆனால் இ்ந்த 2 தெருக்களிலும் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு மேடும், பள்ளமாகவும், குண்டும் குழியுமாகவும் காட்சி அளிக்கின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்ஒத்தவாடை தெருவில் மேடு பள்ளத்தை சீரமைப்பதற்காக தொழிலாளர்கள் தோண்டிவிட்டு சென்றனர்.

ஆனால் அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி அதன் பின்னர் நடைபெறவே இல்லை. இதனால் அந்த பகுதி சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு அலங்கோலமாக காணப்படும் இந்த ெதருவில் கற்கள் கால்களை பதம் பார்க்கின்றன.

பக்தர்கள் கோரிக்கை

கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த 2 தெருக்களும் பரிதாபமாக காணப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். வெளியூரில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலை சுற்றியுள்ள சாலை இந்த நிலையில் இருப்பதை கண்டு வேதனை அடைகின்றனர்.

இ்ந்த நிைலயில் அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி நடைபெற உள்ளது. தீபத் திருவிழாவின் போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். எனவே போர்க்கால அடிப்படையில் வட மற்றும் தென் ஒத்தவாடை தெருக்களின் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story