கிராம மக்கள் குடியேறும் போராட்டம்


கிராம மக்கள் குடியேறும் போராட்டம்
x

உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் குடியேறும் போராட்டம்

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஓட்டப்பிடாரம் தாலுகா கீழமங்கலம் கிராமத்தை சேர்ந்த மக்கள் தமிழ்புலிகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பீமாராவ், வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் கனியமுதன், ஒன்றிய நிதி செயலாளர் ராமகிருஷ்ணன், ஜெய்பீம் தொழிலாளர் நலச்சங்க நிறுவன தலைவர் செண்பகராஜ், சமூக செயற்பாட்டாளர் பால்சிங், மாவட்ட இளைஞரணி செயலாளர் காளிமுத்து ஆகியோர் தலைமையில் இலவச வீட்டுமனை வழங்கப்படாததை கண்டித்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் ராமகிருஷ்ணன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் பேச்சு‌வார்த்தை நடத்தினர்.

அப்போது, கடந்த 2018-ம் ஆண்டு முதல் கடந்த ஜமாபந்தி வரை கீழமங்கலம் கிராமத்தில் அருந்ததியர் குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்து வருகிறோம். இதனை பரிசீலித்து வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். எங்களுக்கு பட்டா வழங்கும் நாளை எழுத்து பூர்வமாக அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம், என கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள், விரைவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.


Next Story