திருப்பூரில் வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியானான்.


திருப்பூரில் வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியானான்.
x

திருப்பூரில் வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியானான்.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியானான்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மாணவர்

திருப்பூர் குமாரனந்தபுரம் அருள்ஜோதிபுரம் முதல் விதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 50). பனிய நிறுவன டெய்லர். இவரது மனைவி கனிமொழி (48). இவர்களுடைய மகன் அபிராம் (16). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து தேர்வில் தோல்வியடைந்தான்.

அதன் பிறகு டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தான். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சம்பத் உடல்நல குறைவால் இறந்தார். இதனால் சிறுவனின் குடும்பம் பெரும் சோகத்தில் மூழ்கியது.

வீட்டு சுவர் சரிந்தது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அபிராம், தனது வீட்டுக்கு அருகே உள்ள நண்பரின் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கு அங்கு சென்றுள்ளார். நண்பரின் வீட்டுக்கு முன்பு சாக்கடை கால்வாய் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. குழியை கடப்பதற்காக மரப்பலகை வைக்கப்பட்டிருந்தது. இரவு 7.30 மணி அளவில் மரப்பலகை மீது ஏறி அபிராம் நண்பரின் வீட்டுக்குள் செல்ல முயன்றான்.

அப்போது எதிர்பாராத விதமாக மரப்பலகை உடைந்து கீழே விழுந்தது. இதில் அருகே இருந்த வீட்டு சுற்றுச்சுவர் அபிராம் மீது விழுந்து அமுக்கியது. இதில் அவன் பலத்த காயமடைந்தான்.

சிறுவன் சாவு

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அபிராம் இறந்தான். இது குறித்து கனிமொழி அளித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை இறந்த இரண்டு வாரத்துக்கு பிறகு மகனும் இறந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.

-----

குறிப்பு படம் உண்டு.

மாணவன் அபிராம்


Next Story