தாய்மாமன், வளர்ப்பு தந்தையின் பாலியல் தொல்லையை அதிகாரியிடம் தெரிவித்த மாணவி


தாய்மாமன், வளர்ப்பு தந்தையின் பாலியல் தொல்லையை அதிகாரியிடம் தெரிவித்த மாணவி
x

தாய்மாமன், வளர்ப்பு தந்தை அளித்த பாலியல் தொல்லை பற்றி அதிகாரியிடம் மாணவி போனில் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

தாய்மாமன், வளர்ப்பு தந்தை அளித்த பாலியல் தொல்லை பற்றி அதிகாரியிடம் மாணவி போனில் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி, தனது தாய், அண்ணனோடு வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அதன் பின்னர் சிறுமியின் தாயார் 31 வயதான டிரைவரை மறுமணம் செய்து கொண்டார். அவர் சிறுமிக்கு வளர்ப்பு தந்தை முறை இருந்தாலும் நீண்ட நாட்களாக சிறுமியிடம், அந்த டிரைவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய்மாமனான 37 வயதான கொத்தனாரும் சிறுமியை கட்டிப்பிடித்து அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என இருவரும் அச்சிறுமியை மிரட்டி இருக்கிறார்கள்.

2 பேர் கைது

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தைரியத்தை வளர்த்துக்கொண்டு, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதையொட்டி அதிகாரிகள் ெசன்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் அச்சிறுமியும் அவரது தாயாரும் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தனர்.

அதன் பேரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வளர்ப்பு தந்தை- தாய்மாமன் ஆகிய 2 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


Related Tags :
Next Story