தெருநாய்கள் கடித்து மாணவி காயம்
தேன்கனிக்கோட்டையில் தெருநாய்கள் கடித்து மாணவி காயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் படித்து வரும் அதேபகுதியை சேர்ந்த 8 வயது மாணவி நேற்று மதியம் பள்ளி வளாகத்தில் நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த தெருநாய்கள் மாணவியை கடித்து குதறியது. அதேபோல் மேலும் சில மாணவர்கள் மற்றும் பொதுமக்களையும் தெரு நாய்கள் கடித்தன. இதில் படுகாயமடைந்த மாணவி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story