மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பலாத்காரம்
மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார். 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுக்கரை
மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார். 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
10-ம் வகுப்பு மாணவி
கோவையை அடுத்துள்ள மதுக்கரை பகுதியை சேர்ந்த 15 வயதான மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அது காதலாக மாறியது. இதனால் அவர்கள் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களின் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த டிரைவரான குணசேக ரன் (வயது25) என்பவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார். எனவே அவர், அடிக்கடி அந்த மாணவியின் வீட்டின் அருகே சுற்றி வந்தார்.
இதனால் அவருக்கு அந்த மாணவி வேறு ஒரு நபரை காதலிப்பது தெரியவந்தது.
ஆபாச படம் எடுத்தார்
இதனால் குணசேகரன் அதிர்ச்சி அடைந்தார். சம்பவத்தன்று அந்த மாணவி தனது வீட்டின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த குணசேகரன் அந்த மாணவியிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினார். அவரை பின்தொடர்ந்து அந்த மாணவியும் ஓடினார்.
இதற்கிடையே குணசேகரன், அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் சென்றார். இதை அறியாமல் அந்த மாணவியும் அங்கு சென்றார். பின்னர் தான் காட்டுப்பகுதியில் இருப்பதை அறிந்த மாணவி தப்பிச் செல்ல முயன்றார்.
ஆனால் குணசேகரன், அந்த மாணவி யை மடக்கி பிடித்து மிரட்டி செல்போன் மூலம் ஆபாசமாக படம் எடுத்தார்.
மிரட்டி பலாத்காரம்
இதையடுத்து அந்த ஆபாச படத்தை வலைத்தளத்தில் வெளியி டாமல் இருக்க நான் சொல்லும்படி கேட்க வேண்டும் என்று கூறி மிரட்டி அந்த மாணவியை பலாத்காரம் செய்தார்.
இதையடுத்து குணசேகரன், அந்த மாணவியின் ஆபாச புகைப் படத்தை தனது நண்பர்களான விஜய் உள்பட 2 பேரின் வாட்ஸ்- அப்புக்கு அனுப்பினார். அதை பார்த்த அவர்கள் 2 பேரும், அந்த மாணவியை சந்தித்து, எங்களுடன் வந்தால் உனது காதலனை பார்க்க உதவி செய்கிறேன் என்று கூறி உள்ளனர்.
டிரைவர் கைது
அதை நம்பி அந்த மாணவி அவர்களுடன் சென்றார். உடனே அவர்கள் 2 பேரும் அந்த மாணவியை அங்குள்ள மாந்தோப்புக்கு அழைத்துச்சென்று, பலாத்காரம் செய்ய முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவர்களிடம் இருந்து தப்பி வந்தார்.
பின்னர் அவர், தனக்கு நடந்த கொடுமை பற்றி பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பேரூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர். விஜய் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.