தந்தை இறந்த நாளில் தேர்வு எழுதிய மாணவி 397 மதிப்பெண் பெற்று சாதனை
கே.வி.குப்பம் அருகே தந்தை இறந்த நாளில் தேர்வு எழுதிய மாணவி 397 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வேலூர்
கே.வி.குப்பத்தை அடுத்த நாட்டார் பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இறைச்சி கடை நடத்தி வந்தார். இவர் கடந்த மாதம் 18-ந் தேதி மின்சாரம் தாக்கி பலியானார். இவரது மகள் நிகிலா கே.வி.குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதி வந்தார். தன்னுடைய தந்தை இறந்தபோதும் என்று பள்ளிக்கு சென்று ஆங்கில தேர்வு எழுதி விட்டு, பிற்பகலில் நடைபெற்ற தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் மாணவி நிகிலா 500-க்கு 397 மதிப்பெண் பெற்று உள்ளார். தந்தை இறந்தநாளில் எழுதிய ஆங்கில பாடத்தில் 91 மதிப்பெண் எடுத்துள்ளார். இதை அறிந்த பள்ளித் தலைமை ஆசிரியர், துணை தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாணவி நிகிலாவைப் பாராட்டினர்.
Related Tags :
Next Story