மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கை மாணவர்கள் பார்வையிடலாம்


மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கை மாணவர்கள் பார்வையிடலாம்
x

மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கை மாணவர்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர்:

அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைக்கப்பட்டிருந்த மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து 10 நாட்களுக்கு அந்த அரங்கினை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி அரங்கில் மாளிகைமேடு தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பழைய அரண்மனை சுவர்களின் மாதிரிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே இதனை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பார்வையிடலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story