துணை சுகாதார நிலையம் சேதமானதால் சிகிச்சையும் நிறுத்தம்


துணை சுகாதார நிலையம் சேதமானதால் சிகிச்சையும் நிறுத்தம்
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே துணை சுகாதார நிலையம் சேதமானதால் சிகிச்சையும் நிறுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு:

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் ஈருடையாம்பட்டு கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராம மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த சுகாதார நிலையத்தை முறையாக பராமரிக்காததால் கட்டிடம் அதன் உறுதி தன்மையை இழந்துள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் நோயாளிகளுக்கு அந்த துணை சுகாதார நிலையத்தில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், துணை சுகாதார நிலைய கட்டிடம் சேதமானதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டரோ, செவிலியரோ சரியாக வருவதில்லை. 2 வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பெயரளவிற்கு வந்து விட்டு செல்கிறார்கள். எனவே துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டி, தினமும் டாக்டர் குழுவினர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story