மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடிய போலீஸ் சூப்பிரண்டு


மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடிய போலீஸ் சூப்பிரண்டு
x

மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடிய போலீஸ் சூப்பிரண்டு

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டார். அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், காவலர்கள் வரவேற்றனர். போலீஸ் நிலைய பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுவது குறித்து பாராட்டு தெரிவித்த போலீஸ் சூப்பிரண்டு காவல் நிலைய சுற்றுப்புறம் இயற்கை எழிலுடன் தூய்மையாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர் மாத்தூர் தொட்டிப்பாலத்தை சுற்றிப்பார்த்தவர் அங்கு வந்த பள்ளிக்கூட குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கலந்துரையாடினார்.


Next Story