ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு 'சல்யூட்' அடித்த போலீஸ் சூப்பிரண்டு


ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்த போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 2 Jun 2023 1:15 AM IST (Updated: 2 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு ‘சல்யூட்’ அடித்த போலீஸ் சூப்பிரண்டு, அவரை தனது காரில் வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு 'சல்யூட்' அடித்த போலீஸ் சூப்பிரண்டு, அவரை தனது காரில் வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது.

பாராட்டு விழா

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக ரவி என்பவர் பணியாற்றி வந்தார். அவர், நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு ஊட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், அவருக்கு சான்றிதழ் மற்றும் சந்தன மாலை வழங்கி பாராட்டி பேசினார்.

இதையடுத்து பாராட்டு விழா முடிந்ததும், சப்-இன்ஸ்பெக்டர் ரவி வீட்டுக்கு செல்ல தயாராக இருந்தார். அவருக்கு, இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

தனது காரில்...

அதாவது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், அவரை தன்னுடய காரில் ஏறி அமர செய்தார். அதன்பின்னர் அவருக்கு ஒரு 'சல்யூட்' அடித்து வீட்டில் இறக்கி விடுமாறு டிரைவருக்கு உத்தரவிட்டார். இந்த செயலால் சப்-இன்ஸ்பெக்டர் ரவி நெகிழ்ந்து போனார். மேலும் சக போலீசாருக்கும், இந்த செயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பிரபாகர் பொறுப்பேற்ற பிறகு போலீசாருக்க வார விடுமுறை கட்டாயம் என்பதை நடைமுறைப்படுத்தினார். மேலும் கோடை சீசனின்போது பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாருக்கு, கறி விருந்து கொடுத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story