இன்ஸ்டாவில் இனிமையாக பேசியவர்...! வாழ்க்கையில் இம்சை அரசனாக மாறினார்...!பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை...!


இன்ஸ்டாவில் இனிமையாக பேசியவர்...! வாழ்க்கையில்  இம்சை அரசனாக மாறினார்...!பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை...!
x

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து 2 வது திருமணம் செய்து கொண்ட பெண்ணை அவரது காதல் கணவர் அடித்து சித்திரவதை செய்யும் வீடியோ வெளியான நிலையில் அது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள பெரியவடகம் பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன்.இவர் வேலூர் மாவட்டத்தை விசித்ரா என்ற 22 வயது பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். விசித்ரா ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்தவர் முதல் கணவருக்கு பிறந்த 2 வயது மகன் விசித்ராவுடன் உள்ள நிலையில் இது சிலம்பரசனுக்கு பிடிக்கவில்லை.

இதனால் சிலம்பரசன் குழந்தையின் தலைமுடியை பிளேடால் அலங்கோலமாக்கி கொடுமைப்படுத்தியதுடன், காதல் மனைவியையும் அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.

தினந்தோறும் மது மற்றும் கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்து தலைமுடியை பிடித்து இழுத்து, காலால் உதைத்து தொல்லை கொடுப்பதால் விசித்ரா தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் தீவட்டிப்பட்டி போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை செய்து, போதை கணவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் மீண்டும் மது மற்றும் கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்து விசித்ராவை கடுமையாக தாக்கிய நிலையில் அதனை பக்கத்து வீட்டு பெண்ணின் மூலமாக வீடியோ எடுத்து போலீசில் அளித்த நிலையில் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவியதையடுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story