கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரியில் தமிழ் கனவு திட்டம் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரியில் தமிழ் கனவு திட்டம் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
தியாகதுருகம்,
தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் மாவட்டந்தோறும் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியினை நடத்திட தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டம், வேலை வாய்ப்பு மற்றும் திறன்பயிற்சி அலுவலகம், உயர் கல்வி வாய்ப்புகள், வங்கிக்கடன், சுய உதவி குழுக்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட சமூகநலத்துறை உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்தும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் ஒரு நூற்றாண்டு வேர்களை தேடி என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிதைகளின் வழியே தமிழ் மனம் என்ற தலைப்பில் எழுத்தாளர் பவா செல்லதுரை ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தமிழர்களின் பண்பாட்டு வாழ்வு நெறிமுறைகளை தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.