ஓசூர் அருகே பஞ்சர் கடையில் காற்று நிரப்பும் டேங்க் வெடித்து 4 பேர் படுகாயம்ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை


ஓசூர் அருகே பஞ்சர் கடையில் காற்று நிரப்பும் டேங்க் வெடித்து 4 பேர் படுகாயம்ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை
x

ஓசூர் அருகே பஞ்சர் கடையில் காற்று நிரப்பும் டேங்க் வெடித்து உரிமையாளர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் அருகே பஞ்சர் கடையில் காற்று நிரப்பும் டேங்க் வெடித்து உரிமையாளர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிலிண்டர் வெடித்தது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூரை சேர்ந்தவர் லத்தீப் (வயது38). இவர் ஓசூர் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பஞ்சர் கடை வைத்துள்ளார். இதில் நாமக்கல்லை சேர்ந்த முருகானந்தம் (18) என்பவர் உதவியாளராக வேலை செய்து வருகிறார். கர்நாடக மாநிலம் கல்புர்க்கி பகுதியை சேர்ந்தவர்கள் லிங்கப்பா (40), முத்து (24).

இவர்கள் பாகலூர் அருகே உள்ள ஒரு கல்குவாரியில் லாரி டிரைவர்களாக வேலை செய்து வருகின்றனர். நேற்று இவர்கள் 2 பேரும் லாரிகளை பழுது நீக்க லத்தீப்பின் பஞ்சர் கடைக்கு வந்தனர். அப்போது லாரி சக்கரங்களுக்கு காற்று நிரப்பும் போது, திடீரென காற்று நிரப்பும் டேங்க் (ஏர் கம்ப்ரசர்) பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

4 பேர் படுகாயம்

இந்த விபத்தில், லத்தீப், உதவியாளர் முருகானந்தம், டிரைவர்கள் லிங்கப்பா, முத்து ஆகிய 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும் பஞ்சர் கடையும் இடிந்து விழுந்தது. இந்த விபத்தை கண்டு அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பாகலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக லிங்கப்பா, முத்து ஆகியோர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஓசூர், பெங்களூருவில் 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன் ஆகியோர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று 4 பேரையும் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். காற்று நிரப்பும் டேங்க் வெடித்து 4 பேர் படுகாயமடைந்த சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story