மண்எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது


மண்எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது
x

உவரி அருகே மண்எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது

திருநெல்வேலி

திசையன்விளை:

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து மீன்வளத்துறை மூலம் மீனவர்களின் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெயை ஏற்றிக் கொண்டு நேற்று காலை டேங்கர் லாரி ஒன்று உவரி நல்வலடி சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரியை நெல்லை பேட்டை உடையார் தெருவை சேர்ந்த டிரைவர் முருகன் (வயது 46) ஓட்டினார். காரிகோவில் விலக்கு பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள வளைவில் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மண்எண்ணெய் சாலையில் கொட்டியது.

இந்த விபத்தில் டிரைவர் முருகன் மற்றும் கிளீனர் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் வெட்டும் பெருமாள் மற்றும் திசையன்விளை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சாலையில் கொட்டி கிடந்த மண்எண்ணெயில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தொடர்ந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரி கிரேன் மூலம் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக உவரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story