சமூக சேவைகள் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு


சமூக சேவைகள் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு
x

சமூக சேவைகள் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அரியலூர்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,500 சமூக சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு சமூக சேவைகள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி தமிழ்நாடு சமூக சேவைகள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் 75 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கோட்டியால் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன. அரிமா சங்க துணை ஆளுநர் சவுரிராஜ் முன்னிலை வகித்தார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 75 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் விழா குழுவினர் தெரிவித்தனர். மேலும் பசுமை காடுகள் வளர்க்கும் திட்டத்திற்கு தமிழக அரசு இடம் கொடுக்க வேண்டும் என்றும் அதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம் என்றும் தெரிவித்தனர். இவ்விழாவில் செல்கோ இந்தியா முதல் நிலை மேலாளர் நம்பிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அரியலூர், திருச்சி, சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சமூக சேவை அமைப்பினர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு சமூக சேவைகள் கூட்டமைப்பு மாநில தலைவர் ஜான் பீட்டர் வரவேற்றார். முடிவில் ரீடு தொண்டு நிறுவன தலைவர் ரீடு செல்வம் நன்றி கூறினார்.


Next Story