மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணி


மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணி
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

நாகப்பட்டினம்

நாகையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

நாகை புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், பப்ளிக் ஆபீஸ்ரோடு, நாகை - நாகூர் சாலை ஆகிய இடங்களில் மாடுகளின் தொல்லை அதிகமாக இருந்தது. குறிப்பாக நாகை-நாகூர் மெயின் ரோடு போன்ற இடங்களில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்து வந்தன.

இவை சாலையின் நடுவே படுத்துக் கொள்வதாலும், குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதாலும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. சில நேரங்களில் சாலையின் நடுவே நின்று மாடுகள் சண்டையிட்டன. இதனால் சிறு, சிறு விபத்துகளும் நடந்தன. குறிப்பாக இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்துக் கிடப்பதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

36 மாடுகள்

மேலும் சாலைகளில் மாடுகளை திரிய விடுபவர்கள் மீது நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன்படி நேற்று முன்தினம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சேகர், முருகானந்தம் ஆகியோர் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் நாகை, நாகூர் பகுதி சாலைகளில் சுற்றித்திரிந்த 2 கன்றுகள் உள்பட 38 மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த உரிமையாளர்கள் மாடு ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் அபராதம் செலுத்தி, மாட்டை மீட்டு சென்றனர்.


Next Story