பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி
விக்கிரவாண்டியில் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி நடந்தது.
விழுப்புரம்
விக்கிரவாண்டி:
கோடை விடுமுறைக்குப்பின் தமிழகம் முழுவதும் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. எனவே விக்கிரவாண்டியில் உள்ள பள்ளிக்கூடங்களை சுத்தம் செய்யும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.
இந்த பணியை பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம், செயல் அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது இளநிலை உதவியாளர் ராஜேஷ், சுகாதார ஆய்வாளர் பிருத்திவிராஜ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், வார்டு கவுன்சிலர்கள் கனகா, ஆனந்தி, சுதா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story