லில்லியம் மலர் செடிகள் நடும் பணி


லில்லியம் மலர் செடிகள் நடும் பணி
x

கொடைக்கானலில் நடைபெறும் மலர் கண்காட்சியை முன்னிட்டு, பிரையண்ட் பூங்காவில் லில்லியம் மலர் செடிகள் நடும் பணி நடந்து வருகிறது.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு, குளு சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சீசன் காலத்தில் நடைபெற உள்ள மலர் கண்காட்சியை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் ஆயிரக்கணக்கான மலர் செடிகள் ஏற்கனவே நடவு செய்யப்பட்டுள்ளன. இறுதிக்கட்டமாக நேற்று ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட லில்லியம் மலர் செடிகள் 800 சிமெண்டு தொட்டிகளில் நடும் பணி நடந்தது. இந்த மலர்கள் சிவப்பு, வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் பூக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறுகையில், இந்த ஆண்டு பிரையண்ட் பூங்காவில் அதிக அளவு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-வது வாரத்தில் பூ பூக்க தொடங்கும். மே மாதம் லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக்குலுங்கும். சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்ட நிலையில் இறுதி கட்டமாக நேற்று லில்லியம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. இவை அனைத்தும் ஏப்ரல் முதல் வாரத்தில் பூக்க தொடங்கும் என்றார்.


Next Story