சுசீந்திரம் பெரிய குளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி


சுசீந்திரம் பெரிய குளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி
x

சுசீந்திரம் பெரிய குளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

சுசீந்திரம் பெரிய குளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி நடந்தது.

தாமரைகள் அகற்றும் பணி

குமரி மாவட்டத்தில் பல குளங்களில் ஆகாய தாமரைகள் வளர்ந்துள்ளதன் காரணமாக மாசடைந்து காணப்படுகிறது. இந்த ஆகாயத்தாமரைகளை அகற்றி, அவற்றை உரமாக்கும் திட்டம் ஒன்றை சுற்றுச்சூழல்துறை சார்பில் செயல்படுத்தி வருகிறது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் 25 குளங்களில் ஆகாயத்தாமரைகளை அகற்றி உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக 25 குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை அரசுசாரா தன்னார்வ அமைப்புகள் மேற்கொள்ள இருக்கின்றன.

முதல் கட்டமாக சுசீந்திரம் பெரிய குளம் அந்த தன்னார்வ அமைப்பு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஆகாய தாமரைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை மேற்கொள்ளும் தன்னார்வ அமைப்பு நிறுவனம் 2 ஆண்டுகள் அந்த குளத்தை பராமரிக்கும் பொறுப்பையும் எடுத்துக் கொள்ளும். இந்த குளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டபிறகு மற்ற குளங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story