டீக்கடையில் தீப்பிடித்தது
கடையநல்லூரில் டீக்கடையில் தீப்பிடித்தது
தென்காசி
அச்சன்புதூர்:
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழக்கடை, மரக்கடை, ஓட்டல், டீக்கடை என தொடர்ச்சியாக கடைகள் உள்ளன. அதிகாலை 5 மணிக்கு டீக்கடையில் இருந்து புகைமூட்டத்துடன் தீப்பிடித்து எரிந்தது. இதனைப்பார்த்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அருகில் உள்ள மரக்கடை மற்ற கடைகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story