குடிபோதையில் தகராறு தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
குடிபோதையில் தகராறு செய்ததை தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த வடநெற்குணம் ஏரி கோடி தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் மணிகண்டன் (வயது 33). சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த இவர், தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதைபார்த்த கண்ணன் ஏன் மனைவியிடம் தகராறு செய்கிறாய்? எனக் கேட்டு மணிகண்டனை கண்டித்துள்ளார். அதற்கு மணிகண்டன் எனக்கு ஆதரவாக பேசாமல், மருமகளுக்கு ஆதரவாக ஏன் பேசுகிறீர்கள் என தந்தையிடம் கூறியதோடு, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story