மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
எலச்சிபாளையம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
நாமக்கல்
எலச்சிபாளையம்
சேலம் மாவட்டம் பைரோஜி அடுத்த வாதராசபுரத்தை சேர்ந்தவர் வேலு (வயது45). இவரது மகன் பிரவின்குமார் (19). வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் காளிப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் இரும்பு கதவை வெல்டிங் செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரவின்குமாரை மின்சாரம் தாக்கியது. அதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் பிரவின்குமாரை மீட்டு ஆட்டையாம்பட்டி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் பிரவின்குமார் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பிரவின்குமாரின் பெற்றோர் மல்லசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story