மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x

தர்மபுரி நகரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி

தர்மபுரி காந்தி நகரை சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது28). இவர் சி.சி.டி.வி கேமரா விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு சென்றார். மீண்டும் வெளியே வந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து அவர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரதீப்குமார் வீட்டின் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விஸ்வநாதன் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (23) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story