குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

ஓசூர் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி

ஓசூர் அருகே குருபட்டி காமராஜ் நகரை சேர்ந்தவர் முஷரப் (வயது 22). இவர் மீது மத்திகிரி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 2 வழக்குகள் உள்ளன. இவர் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி இரவு சொப்பட்டி அருகே தனியார் லே அவுட்டில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தர்மபுரி மாவட்டம் கல்லா அக்ரஹாரத்தை சேர்ந்த வீரமணி (25) என்பவரை தாக்கி கூகுள் பே மூலமாக ரூ.15 ஆயிரத்தை பறித்து சென்றார். மேலும் அவரது காரை முஷரப் மற்றும் அவரது நண்பர்கள் திருடி சென்றனர். இந்த வழக்கில் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முஷரப்பை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முஷரப்பை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் பரிந்துரை செய்தார். இதையடுத்து முஷரப்பை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை சிறையில் உள்ள முஷரப்பக்கு போலீசார் வழங்கினர்.


Next Story