சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
x

அயோத்தியாப்பட்டணத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

அயோத்தியாப்பட்டணம்

அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு 16 வயது மகள் உள்ளார். சிறுமிக்கும், ஒரு தனியார் கிரஷர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த சக்தி (வயது 28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சக்தி, சிறுமியை தனியார் கிரஷர் நிறுவனத்தில் உள்ள ஒரு அறைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இது குறித்து சக்தியிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் சக்தி கருக்கலைப்பு செய்ய சொல்லி சிறுமிக்கு மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். இருப்பினும் கருக்கலைப்பு ஆகாததால், சக்தி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் சக்தி, அந்த நிறுவனத்தில் இருந்து 5 மாதங்களுக்கு முன்பே வேலையை விட்டு நின்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சக்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story