விபத்தில் வாலிபர் பலி
விபத்தில் வாலிபர் பலியானார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள கருங்குளம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகன் பிரவீன்குமார் (வயது 22). இவர் கல்லூரி முடித்துவிட்டு வீட்டில் தந்தைக்கு உதவியாக வேலைகள் பார்த்து வந்தார். பிரவீன்குமார் தனது மோட்டார்சைக்கிளில் கல்லல் அருகே ஏழுமாபட்டி பகுதியில் சென்றபோது நிலைதடுமாறி கீேழ விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த நாச்சியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் இவர் யார் என அடையா ளம் தெரியாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உடல் அங்கேயே கிடந்ததாகவும், பின்பு இணையதள குழு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு அதன்பின்பு அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.