வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை


வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
x

முதியவரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு 1௦ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

முதியவர் சாவு

அறந்தாங்கி ரெத்தினக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம் (வயது 28). இவர் அதே ஊரை சேர்ந்த மகாலிங்கம் என்ற முதியவரின் பெண்னை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வம், மகாலிங்கத்தை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் நிலைதடுமாறிய மகாலிங்கம் கீழே விழுந்ததில் மயங்கினார்.

இதையடுத்து அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக ெதரிவித்தனர். இதுகுறித்து மகாலிங்கத்தின் மகள் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

10 ஆண்டு சிறை தண்டனை

புகாரின் பேரில், புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் மரணம் விளைவிக்கும் குற்றத்திற்காக செல்வத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.


Next Story