வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை


வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
x

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

தஞ்சாவூர்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள வானபுரம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் கர்ணன் (வயது 29). சமையல் தொழிலாளி. இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் தாய் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து கர்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

5 ஆண்டுகள் சிறை தண்டனை

இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்து கர்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.


Next Story