மீண்டும் கைவரிசை காட்டிய இளம்பெண் கைது


மீண்டும் கைவரிசை காட்டிய இளம்பெண் கைது
x

திருட்டு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் கைவரிசை காட்டிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 9½ பவுன் நகை மீட்கப்பட்டது.

கன்னியாகுமரி

ஆரல்வாய் மொழி:

திருட்டு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் கைவரிசை காட்டிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 9½ பவுன் நகை மீட்கப்பட்டது.

நகை திருட்டு

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தெற்கு தெருவை சேர்ந்தவர் சகாய செல்வராஜன் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி டெல்வின். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று ெடல்வின் பீரோவில் உள்ள 9½ பவுன் நகைகளை பார்த்துள்ளார். ஆனால் அங்கு நகைகள் இல்லை.

நகையை காணாததால் அதிர்ச்சி அடைந்த டெல்வின் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் யாரோ மர்மநபர் நைசாக வீட்டுக்குள் புகுந்து திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவருடைய கணவர் சகாய செல்வராஜன் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுத்தார்.

இளம்பெண் கைது

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான தனிப்படையினர் நடத்திய விசாரணையில், தேவசகாயம் மவுண்ட் நடுத்தெருவை சேர்ந்த ஜோஸ் என்பவரது மனைவி ரெப்சி (30) என்பவர் மீது சந்தேகப்பட்டு அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் தான் நகையை நைசாக திருடியது தெரியவந்தது. ஏற்கனவே ரெப்சி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகையை திருடி விட்டு சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கட்டிட தொழிலாளி வீட்டிலும் திருடியுள்ளார்.

அதாவது சகாய செல்வராஜன் வீட்டில் நெருங்கி பழகியபடி ரெப்சி நடித்துள்ளார். பின்னர் ஆளில்லாத நேரத்தை கண்காணித்து அவருடைய வீட்டுக்குள் நைசாக புகுந்து பீரோவில் இருந்த 9½ பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் திருடிய நகையை வடக்கன்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடகு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் நகையை அங்கு சென்று மீட்டனர். மேலும் ரெப்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story