லாரிக்கு அடியில் படுத்து தூங்கிய வாலிபர் தலை நசுங்கி சாவு
சேரன்மாதேவி அருகே கன்டெய்னர் லாரிக்கு அடியில் படுத்து தூங்கிய வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி அருகே கன்டெய்னர் லாரிக்கு அடியில் படுத்து தூங்கிய வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வாலிபர்
தென்காசி புதுமனை 5-வது தெருவைச் சேர்ந்தவர் நவரத்தினம் (வயது 53). கன்டெய்னர் லாரி டிரைவர். இவர் நேற்று மதியம் தென்காசியில் இருந்து தூத்துக்குடிக்கு கன்டெய்னர் லாரியில் சென்றுள்ளார். சேரன்மாதேவியை அடுத்த பத்தமடை அருகே சென்றபோது அவருக்கு தூக்கம் வரவே, பத்தமடை போலீஸ் நிலையம் மேல்புறம் லாரியை நிறுத்திவிட்டு, வண்டியில் படுத்து உறங்கியுள்ளார்.
அப்போது அந்த வழியாக நடந்து வந்த பத்தமடை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மாசானம் (23) என்பவர் ஒதுங்கி நின்ற கன்டெய்னர் லாரியின் கீழே படுத்து உறங்கி உள்ளார்.
பரிதாப சாவு
இதனை கவனிக்காத கன்டெய்னர் லாரி டிரைவர், லாரியை ஓட்டிச் செல்லவே மாசானம் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பத்தமடை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் நவரத்தினத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.