மொபட் திருடிய வாலிபர் சிக்கினார்
சேலம்
சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி (வயது 40). இவருக்கு கடந்த 12-ந் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மொபட்டில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அவசர சிகிச்சை பிரிவு முன்பு தனது மொபட்டை நிறுத்திவிட்டு உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்றார். அதன்பிறகு கடந்த 20-ந் தேதி ஆஸ்பத்திரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மொபட் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் சாந்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், நாமக்கல் மாவட்டம் வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவர், சம்பவத்தன்று சாந்தியின் மொபட்டை திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story