அண்ணணுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் ஏரியில் பிணமாக கிடந்த வாலிபர்
அண்ணணுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் ஏரியில் தம்பி பிணமாக கிடந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கலந்திரா கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி (வயது 25). இவர் வெளியூரில் பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
தீபாவளி விடுமுறையையொட்டி ரஜினி ஊருக்கு வந்துள்ளார், அப்போது அவருடைய அண்ணன் ராஜேசுக்கு இன்னும் 2 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தன்னிடம் எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் அண்ணனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததால் மனமுடைந்த ரஜினி வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது உடைகள், செல்போன் ஆகியவை கிராமத்துக்கு அருகில் உள்ள பாப்பானேரி குளம் பகுதியில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்து பிணமாக கிடந்தவர் ரஜினி தான் என்பதை உறுதி செய்தனர். வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் தாலுகா போலீசார் தீயணைப்பு துறையினருடன் விரைந்து சென்றனர். தீயணைப்பு துறையினர் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ரஜினியின் உடலை மீட்டு தீயணைப்பு துறையினரிடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணனின் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தம்பி உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.