கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் தேடும் பணி தீவிரம்


கச்சிராயப்பாளையம் அருகே    கோமுகி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்    தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி ஆற்று வெள்ளத்தில் வாலிபர் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி


கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி வ.உ.சி. 2-வது தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் கரண்ராஜ் (வயது 22). 10-ம் வகுப்பு வரைக்கும் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று மதியம் தனது நண்பர்கள் குணசேகரன், மணிகண்டன், சந்துரு ஆகியோருடன் கரண்ராஜ் சோமண்டார்குடியில் கோமுகி ஆற்றில் மீன்பிடிக்க சென்றார். அப்போது ஆற்றில் இறங்கி அவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். இதற்கிடையே கனமழை காரணமாக, கோமுகி அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் கோமுகி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், ஆற்றில் தண்ணீர் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. இதில், கரண்ராஜ் மட்டும், வெள்ளத்தில்அ டித்து செல்லப்பட்டார்.

இதை பார்த்த நண்பர்கள், அவரை மீட்க முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள், உடனடியாக கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

கதி என்ன?

அதன்பேரில், போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கரண்ராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6.30 மணியை கடந்தும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே இருள் சூழ்ந்ததால், தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தினர். தொடர்ந்து இன்றும் தேடும் பணி நடைபெற இருக்கிறது.

இதன் மூலம், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கரண்ராஜியின் கதி என்ன என்பது தெரியாததால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கவலையுடன் உள்ளனர்.


Next Story