மதுரையில் விடுதி அறையில் வைத்திருந்த 102 பவுன் நகை திருட்டு


மதுரையில் விடுதி அறையில் வைத்திருந்த 102 பவுன் நகை திருட்டு
x

மதுரையில் விடுதி அறையில் வைத்திருந்த 102 பவுன் நகை திருட்டு போனது.

மதுரை


மதுரையில் விடுதி அறையில் வைத்திருந்த 102 பவுன் நகை திருட்டு போனது.

நகைக்கடை ஊழியர்

மும்பை ஜவகர் பஜார் தாதன்ஜி தெருவை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் ரமேஷ் ஜெயின்(வயது 36). மும்பையில் உள்ள நகைக்கடை ஒன்றில் இவர் வேலை பார்த்து வருகிறார். அங்கு தயாரிக்கும் நகைகளை தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு வந்து வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வழக்கம்.

சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்து மதுரைக்கு வந்த அவர் பெரியார் பஸ் நிலைய பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். தான் கொண்டு வந்திருந்த நகைகளில் 43 பவுன் நகைகளை எடுத்துவிட்டு, மீதம் 102 பவுன் நகைகளை விடுதி அறையில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

102 பவுன் நகை திருட்டு

கொண்டு சென்ற நகையை வியாபாரிகளிடம் விற்றுவிட்டு அவர் விடுதிக்கு வந்தார். அங்கு வந்து பார்த்த போது, விடுதி அறையில் வைத்திருந்த 102 பவுன் நகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து விடுதி நிர்வாகியிடம் கேட்டார். அப்போது அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து திடீர்நகர் போலீசில் அவர் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விடுதிக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஜி்தேந்திர குமார் ரமேஷ் ஜெயின் தங்கியிருந்த அறையை முழுவதும் ஆய்வு செய்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். விடுதி ஊழியர்கள், அங்கு தங்கியிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தனியார் விடுதியில் தங்கியிருந்த வியாபாரியின் 102 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story