அரிசி வியாபாரி வீட்டில் 9 பவுன் நகை, பணம் திருட்டு


அரிசி வியாபாரி வீட்டில் 9 பவுன் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 4 Jun 2023 1:57 AM IST (Updated: 4 Jun 2023 9:30 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சங்ககிரி:-

சங்ககிரி அருகே வடுகப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 87). இவர், தன்னுடைய மனைவி குப்பம்மாளுடன் வீட்டிலேயே அரிசி வியாபாரம் நடத்தி வருகிறார். நேற்று காலை 11.45 மணி அளவில் 50 வயது பெண் ஒருவர் அரிசிக்கடைக்கு வந்துள்ளார்.

அப்போது மாரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக ரூ.500 கொடுக்க வேண்டிய உள்ளது. இதனை பூசாரியிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறி ரூ.500-ஐ ராமசாமியிடம் அந்த பெண் கொடுத்துள்ளார். மேலும் ரூ.1,500 கொடுத்து ஒரு பை அரிசியை எடுத்துக் கொள்வதாகவும் கூறி விட்டு அதற்கான ரூபாயையும் ராமசாமியிடம் அந்த பெண் கொடுத்தார்.அப்போது, என்னுடைய மகன் வந்தால் என்னிடம் தகராறு செய்வான். எனவே நான் சிறிது நேரம் உங்களது வீட்டில் இருந்து கொள்கிறேன் என்று கூறி விட்டு ராமசாமி வீட்டுக்குள் சென்றுள்ளார். ராமசாமியும் அந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். அவர், கோவில் பூசாரிக்கு போன் செய்வதற்காக வீட்டுக்கு வெளியே வந்துள்ளார்.அந்த நேரத்தில் அந்த பெண் ராமசாமி வீட்டின் பீரோவில் இருந்த 8 பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் மோதிரம், ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை திருடிக் கொண்டு நைசாக அங்கிருந்து சென்று விட்டார்.சிறிது நேரம் கழித்துதான் வீட்டில் இருந்த பணம், நகை காணாமல் போனதை கண்டு ராமசாமி அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார்.இதுபற்றி சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மர்மநபர் நடத்திய இந்த துணிகர திருட்டு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story