ரூ.1¾ லட்சம் ஜவுளி பண்டல் திருட்டு


ரூ.1¾ லட்சம் ஜவுளி பண்டல் திருட்டு
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:15:20+05:30)

தூத்துக்குடிக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.1¾ லட்சம் ஜவுளி பண்டல் திருடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

மதுரை மாவட்டம் இடையப்பட்டியை சேர்ந்தவர் வரதராஜன். லாரி டிரைவர். இவர் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு லாரியில் பல்வேறு பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்தாராம். அதில் ஜவுளி பண்டல்களையும் ஏற்றிக் கொண்டு வந்தாராம். வரும் வழியில் அருப்புக்கோட்டையில் மற்றும் நிறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தூத்துக்குடிக்கு வந்து ஜவுளி பண்டல்களை இறக்குவதற்காக பார்த்து உள்ளார். அப்போது லாரியில் இருந்த சுமார் ரூ.1¾ லட்சம் மதிப்பிலான 14 பண்டல்களை யாரோ மர்ம ஆசாமி திருடி இருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story