வெல்டிங் பட்டறையில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் திருட்டு


வெல்டிங் பட்டறையில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் திருட்டு
x

ஒரத்நாடு அருகே வெல்டிங் பட்டறையில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் திருட்டு போனது.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஈச்சங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது33). இவர் அதே பகுதியில் வெல்டிங் பட்டறை கடை வைத்துள்ளார். இந்த கடையில் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த மாசிலா என்பவருக்கு சொந்தமான டிராக்டர் வாகனத்திற்கு மேற்கூரை (குடை) அமைப்பதற்காக சம்பவத்தன்று ஒப்படைத்தனர். இந்த வாகனத்தை வெல்டிங் பட்டறை உரிமையாளர் சரவணன் தனது பட்டறைக்கு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்தநிலையில் டிராக்டரை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வெல்டிங் பட்டறை உரிமையாளர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள டிராக்டரை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story