மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் திருட்டு


மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் திருட்டு
x

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் திருட்டு

மதுரை

மேலூர்

மேலூர் அருகே உள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் சேதுராமலிங்கம் (வயது 42). தனியார் நிறுவன ஊழியரான இவர் அவரது மனைவியின் நகைகளை ஒரு வங்கியில் அடகு வைத்து ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் வாங்கினார். அதன் பின்னர் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மீதுள்ள பவுச்சில் அந்த பணத்தை வைத்துக்கொண்டு சிவகங்கை ரோட்டில் உள்ள பெருமாள்பட்டியில் அவரது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். நான்கு வழிச்சாலை பாலம் அருகில் அவர் சென்றபோது அவருக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அவரது சட்டைப்பையில் இருந்து செல்போனை எடுக்கும்போது அதனுடன் அவர் அவைத்திருந்த 200 ரூபாய் கீழே விழுந்து விட்டது. மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த 200 ரூபாயை எடுத்துக்கொண்டு திரும்புவதற்குள் அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சேதுராமலிங்கம் வைத்திருந்த ரூபாய் நோட்டு கட்டுக்குள் இரண்டை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சேதுராமலிங்கம் பணம் வைத்திருந்தை பார்த்தபோது ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் கட்டு ஒன்று மட்டும் தப்பியது. ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story