இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு
இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே முறம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி (வயது 64). இவர் ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அலுவலகத்தில் இருந்து காசோலை மூலம் பணம் எடுப்பதற்காக ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு வந்துள்ளார்.
ரூ.1 லட்சத்து 5,530-த்தை எடுத்து இதில் ஒரு லட்சத்தை மட்டும் இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். பின்னர் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் உள்ள கடைக்கு சென்று பொருள் வாங்குவதற்காக வண்டியை நிறுத்தி விட்டு சென்றார். திரும்ப வந்து பார்க்கும்போது வண்டியில் உள்ள ரூ.1 லட்சத்தை காணவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேடிப் பார்த்துள்ளனர். இதுகுறித்து தெற்கு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.