ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் திருட்டு


ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம்  திருட்டு
x

ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் திருட்டு

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ரெங்கநாதபுரம் கீழ் தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்(வயது62). விவசாயி. இவர் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.1லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்து உள்ளார். பின்னர் அந்த பணத்தை ஸ்கூட்டரில் வைத்து கொண்டு திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்தி விட்டு டீ குடித்தார். பின்னர் வந்து பார்த்த போது ஸ்கூட்டரில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story