போதை ஊசி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


போதை ஊசி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

போதை ஊசி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அடப்பன்வயல் 3-ம் வீதியில் வசித்து வருபவர் அப்துல்ரகீம்(வயது 29). இவருக்கு சார்லஸ் நகரை சேர்ந்த ஜெயராமன் என்ற சோனி(21) போதை ஊசி போட்டதாகவும், இதனால் அவர் மயக்கமடைந்தது தொடர்பாகவும் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஜெயராமனை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கைதான ஜெயராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே பரிந்துரையின்பேரில் கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேலும் ஜெயராமனிடம் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான நகலில் கையெழுத்து பெற்று, அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story