4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சேரன்மாதேவி பாரதிதாசன் தெருவை சேர்ந்த மாயாண்டி மகன் சுப்பிரமணி என்ற பண்ண அய்யப்பன் (வயது 19), வ.உ.சி. தெருவை சேர்ந்த முரளி கிருஷ்ணன் மகன் சரவணன் (20), பத்தமடையை சேர்ந்த தாயப்பன் மகன் பிச்சையா என்ற உள்ளி பிச்சையா (28) ஆகிய 3 பேரை கொலை முயற்சி வழக்கில் சேரன்மாதேவி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று, 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி சுப்பிரமணி என்ற பண்ண அய்யப்பன், சரவணன், பிச்சையா என்ற உள்ளி பிச்சையா ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை சேரன்மாதேவி போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.
ஏர்வாடி சேசையாபுரத்தை சேர்ந்தவர் குமார் மகன் கண்ணன் (25). இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்தநிலையில் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் விஷ்ணு, இதனை ஏற்று கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று கண்ணனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை பழவூர் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.