புகையிலை விற்றவர் சிக்கினார்


புகையிலை விற்றவர் சிக்கினார்
x

திண்டுக்கல் அருகே புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள வக்கம்பட்டி பகுதியில் உள்ள கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று வக்கம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள பேக்கரி கடையில் சோதனை நடத்தினர்.

அந்த கடையில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வெயிலடிச்சான்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த விஜயகுமாருக்கு, உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர்சாதிக் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.


Next Story