திருப்பதிசாரம் அருகே உள்ள சுங்கச்சாவடியை இன்னும் ஒரு வாரத்துக்குள் திறக்க ஏற்பாடு


திருப்பதிசாரம் அருகே உள்ள சுங்கச்சாவடியை இன்னும் ஒரு வாரத்துக்குள் திறக்க ஏற்பாடு
x

திருப்பதிசாரம் அருகே அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடியை இன்னும் ஒரு வாரத்துக்குள் திறக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

திருப்பதிசாரம் அருகே அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடியை இன்னும் ஒரு வாரத்துக்குள் திறக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.

சுங்கச்சாவடி

காவல்கிணறு- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்கு திருப்பதிசாரம் அருகே சுங்கச்சாவடி கட்டப்பட்டு உள்ளது. சுங்கச்சாவடி வழியாக செல்லும் கார், ஜீப், வேன், இலகுரக வாகனம், இலகுரக வணிக வாகன வகை, மினி பஸ், பஸ், டிரக், கனரக வாகனங்கள், மணல் ஏற்றி செல்லும் வாகனம் என வாகனங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வணிக பயன்பாடு இல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு 2022-2023-ம் ஆண்டு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.315 என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண விவரங்கள் 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி அருகே இருபுறமும் வைக்கப்பட்டு இருக்கும் பெரிய போர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்னும் ஒரு வாரத்துக்குள்...

இந்த சுங்கச்சாவடியானது கடந்த 24-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மின் இணைப்பு வழங்கப்படாததால் சுங்கச்சாவடி திறக்கப்படவில் லை. இதைத் தொடர்ந்து சுங்கச்சாவடிக்கு மின் இணைப்பு வழங்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ளது.

எனவே இன்னும் ஒரு வாரத்துக்குள் திருப்பதிசாரம் அருகே உள்ள சுங்கச்சாவடி திறக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story