மணல் கடத்தி வந்த டிராக்டர் பறிமுதல்


மணல் கடத்தி வந்த டிராக்டர் பறிமுதல்
x

ஆரணி அருகே மணல் கடத்தி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது எஸ்.வி.நகரம் அருகே மணல் கடத்தி கொண்டு டிராக்டர் வந்தது. டிராக்டரை வழிமறித்தபோது டிரைவர் டிராக்டரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

உடனடியாக ஆரணி தாலுகா போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு நடுரோட்டில் நிறுத்தப்பட்ட டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் சேவூர் கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவரின் டிராக்டர் என தெரிய வந்தது.

இதுகுறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story