(செய்திசிதறல்) டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி
டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.
டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.
டிராக்டர் கவிழ்ந்தது
வையம்பட்டியை அடுத்த சீகம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 26). இவர் நேற்று டிராக்டரில் உழவுப்பணிக்காக அங்குள்ள வயலுக்கு சென்றார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி கார்த்திகேயன் படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவரை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.2 ஆயிரம் பறிப்பு
* திருச்சி சிந்தாமணி அருகே நின்று கொண்டிருந்த இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த செல்வகுமாரிடம் (42) கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் பறித்ததாக பெரம்பலூரை சேர்ந்த ராஜூ (33) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் மேற்பார்வையாளர்
* திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் (46). இவர் தென்னூர் அண்ணாநகர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். தென்னூர் அரசமரம் பஸ்நிறுத்தம் அருகே இவர் நின்று கொண்டிருந்த போது, 2 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-த்தை பறித்துச்சென்றனர். இதுதொடர்பாக விஜயகுமார் (21) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
* திருச்சி தெப்பக்குளம் பஸ்நிறுத்தத்தில் தள்ளுவண்டி கடை நடத்தி வருபவர் கமலியா (44). இவர் பஸ்சில் சென்று கொண்டிருந்த போது, இவருடைய பையில் இருந்த ரூ.1000-த்தை சென்னையை சேர்ந்த சம்பாதேவி (45) திருட முயன்ற போது கையும் களவுமாக சிக்கினார். அவரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.