கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி


கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி
x

கீழ்பென்னாத்தூர் அருகே கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிணற்றுக்குள் கவிழ்ந்த டிராக்டர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கார்ணம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. அவரது மகன் குமரன் (வயது 32). அதே ஊரை சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் பூவரசன். இவர், கார்ணாம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் பாபுவுக்கு சொந்தமான கலப்பையுடன் கூடிய டிராக்டரை தனது சொந்த பணிக்காக எடுத்து சென்றுவிட்டு மீண்டும் பாபுவின் தரைமட்ட கிணற்றின் அருகில் நிறுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது டிராக்டரில் அமர்ந்திருந்த குமரனிடம் டிராக்டரில் இருந்த கலப்பையை பூவரசன் கழற்றிவிட சொன்னதாக கூறப்படுகிறது. தொடர்ந்து குமரன் அதனை கழற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது டிராக்டரை பூவரசன் இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் டிராக்டருடன் குமரன், பூவரசன் ஆகியோர் 75 அடி ஆழ கிணற்றில் தலைகுப்புற கவிழ்ந்தனர்.

வாலிபர் பலி

இதில் பூவரசன் உயிர்தப்பினார். குமரன் மீது டிராக்டர் அழுத்தியதால் படுகாயம் அடைந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் இருந்து குமரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உபயதுல்லாகான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story