புறவழிச்சாலையில் டிராக்டர் கவிழ்ந்தது
புறவழிச்சாலையில் டிராக்டர் கவிழ்ந்தது.
புதுக்கோட்டை
இலுப்பூர் புறவழிச்சாலையில் மெய்யக்கவுண்டம்பட்டிக்கு விறகுகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று ெகாண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் இருந்த விறகுகள் அனைத்தும் சாலையில் கொட்டியது. இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த டிராக்டர் மீட்கப்பட்டது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் அதில் வந்தவர்களும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story